தமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மட்டுமே எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு முரணான வகையில் எரிவாயுவை சேமித்தல் மற்றும் கொள்கலன் சேமிப்பு பேணுப்படுமாயின் அது லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அனுமதியல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80 இற்கும் மேற்பட்ட எரிவாயு கொள்கலன்களும், குருநாகல் மாநகர முதல்வர் துஷார சஞ்சீவவின் வீட்டிலிருந்து ஒரு தொகை எரிவாயு கொள்கலன்களும் மீட்கப்பட்டுள்ளன