”வடக்கில் எதுவித அசம்பாவிதமும் வன்முறையும் நடைபெறவில்லை. சம்பவம் செய்யும் மனவிரக்தியிலும் நாங்கள் இல்லை”

நேற்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்தில் அவருடைய பதாகை எரிந்தது கூட வன்முறையல்ல அது ஒரு விபத்து. தினமும் அண்ணனின் உருவப்படத்துக்கு தம்பிகள் கற்பூரம் காட்டி வழிபடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் காட்டி கும்பிடும் போது கைதவறிக் கற்பூரச்சட்டி விழுந்துதான் அந்தப்பதாகை எரிந்தது.

பாதாகையை மட்டும் எரிக்கும் அளவில் நாங்கள் சல்லிகள் அல்ல. எனவே அதனை பெரிதுபடுத்த வேண்டாம். ”வடக்கில் எரிந்தது ,வடக்கு மக்கள் கிளர்ந்தார்கள்” என்று அள்ளி அவிக்கும் மீடியாக்கள் சூனா பானா கையில் சிக்கினால் விளைவுகளுக்கு பஞ்சாயத்து பொறுப்பில்லை.
என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் யாழ் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை நகைச்சுவையுடன் பதிவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.