அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளன.
- Advertisement -
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 375 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இலங்கை மத்திய வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 356.83 அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 259.0083 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 275.5551 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கனடிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 281.5923 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 294.4629 ரூபாயாக பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்வனவு விலை 369.2740 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 383.1015 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ரென்மின்பி ஒன்றின் கொள்வனவு விலை 54.0742 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 56.3930 ரூபாயாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 384.1420 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 399.6180 ரூபாயாக பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 453.3875 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 472.7292 ரூபாயாக பதிவாகியுள்ளது.
யென் ஒன்றின் கொள்வனவு விலை 2.7852 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 2.8929 ரூபாயாக பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 261.8944ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 270.9608 ரூபாயாக பதிவாகியுள்ளது