நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -
இதன்படி 20 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
- Advertisement -
எனினும், சில எஞ்சின் ஒயில் வகைகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சில கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருந்த 4 லீற்றர் இன்ஜின் ஒயிலின் விலை தற்போது ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை உயர்ந்துள்ளதாக என்ஜின் ஒயில் கடை உரிமையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இன்று சில்லறை விற்பனையில் விற்கப்படும் எஞ்சின் ஒயிலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.