பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ, பதவி விலகும் பட்சத்தில், அந்த பதவிக்கு தினேஷ் குணவர்தனவை நியமிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இவ்வாறு தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்கும் பட்சத்தில், அவருக்கு வேறு எந்தவொரு அமைச்சு பொறுப்புக்களையும் வழங்காதிருப்பதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினராகவும், சபை முதல்வராகவும் தினேஷ் குணவர்தன செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது