ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்ப்பதற்றம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ரஷ்ய வான், கடல் மற்றும் தரை மார்க்கமாக நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
- Advertisement -

போரில் இரு நாட்டு வீரகளும் உயிரிழந்த நிலையில் உக்ரைன் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், Vitaly Skakun Volodimirovich என்ற உக்ரேனிய சிப்பாய், ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவதைத் தடுக்க, தன்னைத் தானே வெடிக்க வைத்து உயிரிழந்தார்.
- Advertisement -
உக்ரேனிய சிப்பாய், இவ்வாறு உயிரிழந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதுடன் உயிரிழந்த வீருக்கு பல நாடுகளும் இரங்கலை தெரிவித்திருந்தன. ஆனால் தமிழீழ விடுதலைக்கான போரில் நமது மண்ணில் இவ்வாறு மரணித்த ஆயிரக்கணக்கான போராளிகளை பயங்கரவாதிகள் என இந்த உலகம் பச்சை குத்தியுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது


இது எந்த வகையில் நியாயம்? உக்ரேனிய சிப்பாயும் ரஷ்ய படைகளிடம் இருந்து தன் மண்ணை மீட்கத்தான் தன்னை தானே வெடிக்கை வைத்து மனித வெடிகுண்டானார்.
அதேபோல எத்தனையோ விடுதலை புலிபோராளிகள் எமது மண்ணை மீட்க வெடிகுண்டாக மாறிய சம்பவங்கள் ஏராளம் உள்ளன. அந்தவகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் மனித வெடிகுண்டான கப்டன் மில்லர் முதல் பல போராளிகள் தமிழ் மக்களின் விடிவுக்காய், ஈழ மண்ணுக்காய் சாவை தழுவிக்கொண்டனர்.
அவர்கள் ஒன்றும் தனி நபருக்காக போராடவில்லை. ஒட்டு மொத்த ஈழதமிழ் சமூகத்திற்காகவும் போராடி மரணித்தார்கள். இந்த நிலையில் உக்ரேனிய வீரரை கொண்டாடும் இந்த உலகம் , தமிழர் மண்மீட்பு போருக்காய் மரணத்தவர்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்தது என்பது தான் இங்கு கேள்விக்குறியாக உள்ளது.