அளவீட்டு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாடகை முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்காக மீற்றர் பொறுத்தும் வேலைத்திட்டத்தை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு மிற்றர் பொறுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திணைக்களம் இதற்கு முன்னா் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், நடமாடும் டெக்ஸி மீற்றர் சேவை மையங்களை அமைப்பதற்கும், பிரதேச செயலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட டெக்ஸி மீற்றர்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமானது மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்தது