நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.