பிரான்சில் குறைந்த வருமானம் கொண்ட சுமார் 58 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதல் 100 யூரோ பெறுமதியுடைய அரச காசோலைகள் அனுப்பட்டு வருகின்றன.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற சக்திவளங்களின் கட்டணங்கள் உயர்வடைந்துள்ள நிலையில், அவற்றை சமாளிக்கும் வகையில் எதிர்வரும் பண்டிக்கைக் காலத்தை மையப்படுத்தி இந்த நிதிச் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது.
- Advertisement -
பிரெஞ்சுப் பிரதமர் ஜேன் கஸ்ரெக்ஸ் கடந்த செப்டம்பர் அறிவித்தபடி, இன்று முதல் இந்த 100 யூரோ சன்மானத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற சக்திவளங்களின் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளதால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் நிதிநெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.
இதனால் இந்த நிலையை சமாளிக்கும் வகையில் அரசாங்கத்தால் இந்த சன்மானத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட்ட 58 இலட்சம் குடும்பஙகள் இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த குடும்பங்களுக்குரிய இந்த சன்மானத்தொகை காசோலையானது அவர்கள் வாழும் பிரதேசங்களை பொறுத்து இன்று முதல் எதிர்வரும் 22 ஆந் திகதி வரை அவர்களின் வீடுகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இல்து பிரான்ஸ் பிராந்தியத்தின் சகல நிர்வாக பிரிவுகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 ஆந் திகதி வெள்ளிக்கிழமைக்கு இடையில் இவை அனுப்படவுள்ளன.
100 யூரோக்கள் கொண்ட இந்த காசோலையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31, வரை வீடுகளுக்குரிய எரிசக்தி கட்டணங்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.