‘தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முடியாமற் போனது’ மஹிந்தவின் தனிப்பட்ட செயலர் பகீர் தகவல்

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் பலரிடத்திலும் இருப்பதாக பிரதமரின் தனிப்பட்ட செயலாளரும் கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான தனசிறி அமரதுங்க பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த வார இறுதியில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகப் பரவி வந்தன.

இந்நிலையில் ஊடகமொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்ததாக வெளியாகிய தகவல் குறித்தும், இது குறித்த உண்மை நிலவரங்களையும் தனிப்பட்ட செயலரான தனசிறி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது – மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளாலும் முடியாமற் போனது எனவும், அடுத்த தேர்தலை பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *