யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை, மற்றும் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட

அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளை கண்டிப்பதற்காக நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே சுரேஸ் பிரேமசந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதன்போது கருத்துரைத்த அவர்,
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும்.

எனவே அரசாங்கம் இந்த தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும் என்று அதற்கான கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தின்; செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் தூதுவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு உண்மை உணர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயக போராளிகள், தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் தரப்புக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அந்தக்கட்சி நிகழ்வில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *