ஸ்ரீலங்காவில் தொடரும் கைதுகள்; தற்போதுவரை 56,326 பேர் சிக்கினர்

தற்போதுவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஸ்ரீலங்காவிலும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்குச் சட்டம் படிப்படியாக நீக்கப்பட்டு நாடு சற்று வழமைக்கு திரும்பினாலும் விடுமுறை நாளான இன்று நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 15,490 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *