இன்று நெடுந்தீவில் இருந்து வெட்டு காயங்களோடு கொண்டுவரப்பட்ட 100 வயது மூதாட்டியின் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மூதாட்டியின் முகப்பகுதியில் வெட்டு காயமும் கீழ்த் தாடை என்புடைவும் காணப்படுவதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அதேவேளை அவருக்கு மேலதிக பரிசோதனைகளும் சத்திர சிகிச்சையும் செய்யப்பட வேண்டி இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகிறது.