சித்திரை புத்தாண்டு 2023 ஆடை நிறம் – ஆங்கில மாத வரிசையில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று சித்திரை ஒன்றாம் தேதி வருகிறது. இந்த சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டாக ஒவ்வொரு வருடமும் அனுசரித்து கொண்டாடப்பட்டு வருகின்றது. பல குழப்பங்களுக்கு மத்தியில் சித்திரை 1, 2023 தினம் தமிழ் மாத புத்தாண்டாக கொண்டாடுகின்றோம்.
மொத்தம் இருக்கின்ற 60 ஆண்டுகளில் நாம் இருக்கின்ற இந்த வருடம் அதாவது ஏப்ரல் 14, 2023 முதல் ஏப்ரல் 13, 2024 வரையும் சோபகிருது வருடமாக கருதப்படுகின்றது. இந்த சோபகிருது ஆண்டு 60 ஆண்டுகளில் 37 ஆக உள்ளது. இந்த சோபகிருது ஆண்டு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அருள்மிகு சூர்யபகவான் அவர்கள் சித்திரை மாத முதல் தேதியில் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது கூடுதல் பலம்.

இந்த ஆண்டு வெள்ளை வண்ணத்துடன் ஆடைகள் அணியலாம். பிரகாசமாகவும், சமாதானத்தின் குறியீடாகவும் இது இருப்பதால் இதனை உபயோகிக்கலாம்.