யாழில் ஒருவருக்கு கொரோனா ..!

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சுவிஸ் மத போதகருடன் 30 நிமிடம் குறித்த நபர் தனியாக உரையாடியுள்ளார்.

அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி. சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவரை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *