ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரையில் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 338 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்தக்காலப்பகுதியில் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் விளையாட்டு மைதானங்களில் நடமாடியமை, வீதிகளில் நடமாடியமை , உணவகங்களை திறந்து வைத்திருந்தமை, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் பொது இடங்களில் மதுபாவனையில் ஈடுப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *