கம்பஹா, கொழும்பில் அதிகளவான நோயாளர்கள்..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

முறையே கம்பஹாவில் 18 பேரும் கொழும்பில் 17 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் குருநாகல் -04, களுத்துறை-04, இரத்தினபுரி -03, காலி -01, கேகாலை -01, மாத்தறை -01, மட்டக்களப்பு -01, பதுளை -01 என கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இலங்கையில் வெளிநாட்டவா்கள் 03 பேரும் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளனா். வயது ரீதியாக இலங்கையில் பாதிக்கப்பட்டவா்களில் 11 முதல் 20 வயதானோர் 5.6. வீதம், 21 முதல் 30 வயதானோர் -11.1 வீதம், 31 முதல் 40 வயதானோர் – 14.8 வீதம், 41 முதல் 50 வயதானோர் – 42.6 வீதம், 51 முதல் 60 வயதானோர் -16.7 வீதம், 61 முதல் 70 வயதினா் 7.4 வீதம், 71 முதல் 80 வயதினா் -7.4 வீதமாக உள்ளனா்.

பாலின ரீதியான 78 வீதம் ஆண்களும் 22 வீதம் பெண்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.இலங்கையில் இதுவரை 65 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *