பாலியல் குற்றச்சாட்டுக்களின் எதிரொலி

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராகத் துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் யாவும் இன்று சனிக்கிழமை பிரதான வீதிகள் கடைகள் சந்தைகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரத்தில் வெளியேறு..! வெளியேறு ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று எனக் குறிப்பிடப்பட்டு எமது பிரதேசத்தில் அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பாலியல் ரீதியான செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் செயற்பட்டு வருகின்ற வைத்திய அத்தியட்சகர் ரஹ்மானை வெளியேற்றி புதிய நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டு கல்முனை தூய்மைப்படுத்தும் இளைஞர்கள் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

மேற்குறித்த வைத்தியசாலையில் விசேட தர தாதி உத்தியோகஸ்தர் ஒருவர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது.

இவ்விடயத்தை வெளியிட்டதற்காக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அண்மைக் காலங்களாக விசேட தர தாதி உத்தியோகஸ்தர் ஒருவர் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இதனால் பெண்கள் அமைப்புக்கள் போராட்டங்களை முன்வைத்த பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்று வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *