ஏயார் பஸ் விவகாரம் : பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு!

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறும். நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதற்கான பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ஆம், 19ஆம் திகதிகளில் இடம்பெறும். இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *