மிக் விமானக் கொள்வனவு விவகாரம்: நாடு திரும்பியுள்ள உதயங்க வீரதுங்கவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் வழியாக அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வந்த அவரிடம் தற்போது சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின்போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வி­யுடன் கைது செய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணையை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *