இரண்டு முறையும் ஆண்டுக்கான சிறந்த சேவைகளை வழங்குனர் விருதை வெல்லும் மொபிடெல்.

whatsup மற்றும் Vibar மூலமான 2 வருடகால வெற்றிகரமான வாடிக்கையாளர் சேவையை மொபிடெல் அனுஸ்டிக்கிறது.

இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் இன்னுமொரு மைல்கல்லினை கடந்து முத்திரை பதித்துள்ளது.

இது Over the Top Applications (OTP) எனப்படும் WhatsApp மற்றும் Viber போன்ற பல தெரிவுகளைக் கொண்ட அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதில் இரண்டாவது வெற்றிகரமான ஆண்டினை அனுஸ்டிக்கிறது.

தங்களது வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பவற்றைப் புரிந்து கொண்டு ரூபவ் மொபிடெல் ஆனது WhatsApp மற்றும் Viber மூலமான டிஜிட்டல் தலைமையிலான வாடிக்கையாளர் சேவையினை

2018ஆம் ஆண்டில் இலங்கையில் முதலாவது முறையாக அறிமுகப்படுத்தியது. OTT தளங்கள் வழியாக வாடிக்கையாளர் தொடுபுள்ளிகளை வழங்கிடும் மொபிடெலின் முன்னோடியான இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பில் இருந்திடவும் தங்கள் விசாரணைகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் தங்கள் பிரச்சினைகளை சிக்கலற்ற விதத்தில் தீர்த்துக் கொள்ளவும் வழிவகுத்தது.

அத்தோடு Chatbot, Self-Care App, DataMart App, Web Chat மற்றும் பாரம்பரிய hotlines, frontline support க்கு மேலதிகமாக E-mail மற்றும் fax போன்ற ஏனைய டிஜிட்டல் வாடிக்கையாளர் தொடுபுள்ளிகளையும் வழங்குகிறது. தங்களால் இயலுமான அனைத்து விதமான தொடுபுள்ளிகளையும் தங்கள் வாடிக்கையாளர் தளத்துக்கு வழங்குவதன் மூலம் மொபிடெல் ஆனது தமது வர்த்தகக் குறியின் வரியினையும் அன்பு மற்றும் வினைத்திறன் மிகுந்த வாடிக்கையாளர் சேவை தர நிர்ணயங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு பழக்கப்படுத்தியுள்ளது.

மொபிடெல் எப்பொழுதும் இத்தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் மூலம் புதிய வரையறைகளை அமைக்கிறது.

மொபிடெலின் தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் வாடிக்கையாளர் சேவைகளானது ஆண்டுக்கான சிறந்த சேவைகளை வழங்கிடும் வர்த்தக நாமம் என்ற விருதினை தொடர்ச்சியாக இரண்டு முறை 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் SLIM Brand Excellence Awards இல் பெற்றுக் கொண்டது.

சராசரியான சேவைகளுக்கு மேலதிகமாக அதியுன்னத வாடிக்கையாளர் ரூடவ்டுபாடு மற்றும் சேவையை வழங்குவதற்காக அண்மையில் இடம்பெற்ற Singapore Customer Engagement Forum & Awards இல் பராட்டையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *