ஒரே நாளில் 242 பேர் கொரோனாவால் பலி : உயிரிழப்பு 1,369, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தையும் தாண்டியது!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 60,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,369 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் குறித்த வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுள் 8,219 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 6,032 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்று பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுளில் பரவியுள்ளது.சீனா : பாதிப்பு – 59,805, உயிரழப்பு – 1,367

ஜப்பான் : பாதிப்பு – 247 , ஹொங்கொங் : பாதிப்பு – 50 , சிங்கப்பூர் : பாதிப்பு – 50 , தாய்லாந்து : பாதிப்பு – 33 , தென்கொரியா : பாதிப்பு – 28 , மலேசியா : பாதிப்பு -18 , தாய்வான் : பாதிப்பு -18 , ஜேர்மனி : பாதிப்பு – 16 , வியட்நாம் : பாதிப்பு -15 , அவுஸ்திரேலியா : பாதிப்பு – 15 , அமெரிக்கா : பாதிப்பு – 14 , பிரான்ஸ் : பாதிப்பு – 11 , மாக்கோ : பாதிப்பு – 10 , பிரிட்டன் : பாதிப்பு – 09 , டுபாய் : பாதிப்பு – 08 , கனடா : பாதிப்பு -08 , பிலிப்பைன்ஸ் : பாதிப்பு – 03, உயிரழப்பு – 01 , இந்தியா : பாதிப்பு – 03 , இத்தாலி : பாதிப்பு – 03 , ரஷ்யா : பாதிப்பு – 02 , ஸ்பெய்ன் : பாதிப்பு – 02 , கம்போடியா : பாதிப்பு – 01 , பெல்ஜியம் : பாதிப்பு – 01 , சுவீடன் : பாதிப்பு – 01 , நேபாள் : பாதிப்பு – 01 , இலங்கை : பாதிப்பு – 01 , பின்லாந்து : பாதிப்பு – 01

நேற்று புதன்கிழமை சீனாவின் ஹூபே மாகாணத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14,840 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *