பளைப் பொலிசார் அதிரடி வேட்டை! 25 மண் கடத்தல்க்காரர்கள் சிக்கினர்

பளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 டிப்பர் வாகனங்கள், 10 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று, கிளாலி, தர்மக்கேணி, அரசர்கேணி பகுதிகளில் சட்டத்திக்கு முரணாக சில குழுக்கள் மண் அகழ்வதை எதிர்த்து மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 17ம் திகதி ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுதிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து பளை பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டத்திற்கு முரணாக மண் அகழ்ந்த 15டிப்பர் வாகனங்களும், 10 உழவு இயந்திரங்களும் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் பளை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *