HomeNewsLocal Newsநிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி திடீரென தீப்பிடித்ததில் சாரதி உயிரிழப்பு .

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி திடீரென தீப்பிடித்ததில் சாரதி உயிரிழப்பு .

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் நிறுவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென தீப்பிடித்ததில் லொறியின் சாரதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

சடலமாக மீட்கப்பட்டவர் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிகுந்தபுர பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 48 வயது குடும்பஸ்தர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பொலநறுவை பிரதேசத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி விரைந்த லொறியே இன்று காலை சுமார் 4.30 மணியளவில் தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நோக்கி விரைந்த லொறியின் சாரதி சற்று இளைப்பாறும் பொருட்டு லொறியை நிறுத்தி வைத்து நித்திரை கொண்ட நிலையில் இச்சம்பவம் நிகழந்திருக்கலாம் என தம்பலகாமம் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments