மியன்மாருக்கான இலங்கைத் தூதவராகப் பதவிவகித்து வந்த பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து அவர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்சமயம் அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.
- Advertisement -
இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்களாக கடமையாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.