கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்க நனோ தொழிநுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிபுணர் திலான் ராஜபக்ஷ கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
இந்த கிருமி தொற்று நீக்கி திரவத்தை பணப்பைகள், கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பாடசாலை பைகள் போன்றவற்றின் மேற்பரப்பில் பயன்படுத்தலாம். குறித்த திரவத்தை ஒரு முறை விசிறினால் 90 நாட்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும்.
- Advertisement -
அதன் நுட்பமான செயல்திறன் காரணமாக, ஒரு முறை ஆடைகளுக்கு விசிறினால் பல வாரங்களுக்குச் செயலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.