யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை அவர் பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை யாழில் நேற்றையதினம் இளம் கர்ப்பிணிப்பெண் ஒருவர் உட்பட நால்வர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.