மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலோரப்பகுதிகளில் நாளை அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறித்த கடல் பகுதிகளில் நாளை (8) முதல் 10 ஆம் திகதி வரை மீன்பிடித்தல் ஆபத்தானது என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 60-70 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும். மன்னார் முதல் புத்தளம் வரையிலும், காலியில் இருந்து பொத்துவில் வரையிலும் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அதிகரித்துக் காணப்படும். இந்த காலப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.