நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை 21ம் திகதி தளர்த்தவேண்டாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
- Advertisement -
என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சில நாட்களிற்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்பிரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக காணப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளால்கிடைத்த பலாபலன்களை இழக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.