இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைச் சட்டத்தை மீறியவர்களை முழந்தாளில் இருக்க வைத்த சம்பவமானது இராணுவத்தின் இழிவான செயல் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 11 உறுப்புரை கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான தண்டனையை தடை செய்கின்றது. இதேவேளை இந்த செயற்பாடானது சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக அமைவதாகவும் அம்பிகா தமது சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -
இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர்பகுதியிலேயே பயணத்தடையினை மீறியவர்களுக்கு முழந்தாளில் இருத்தி இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.