கோவிட்-19 நோய்த் தொற்று உறுதியானவர்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உடையவர்கள் செல்லப் பிராணிகளிடமிருந்து விலகியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது.சுகாதார நிபுணர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று செல்லப் பிராணிகளுக்கு பரவுவதனை தடுக்கவே இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கமொன்றுக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருந்தது.
- Advertisement -
இந்த நிலையில் மனிதர்களின் மூலமாக கோவிட் தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், எனவே நோய்த் தொற்று உடையவர்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து விலகியிருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.