யாழ்ப்பாணத்தில் உள்ள திருமணமான பெண் கிராமசேவையாளர் ஒருவரிடம் நெருங்கிப்பழகிய இளைஞன் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், அயலில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு அவ் இளைஞனுக்கு பல பரிசுப் பொருட்களையும் குறித்த பெண் வாங்க்கி கொடுத்துள்ளதாக இளைஞனின் நண்பர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரியின் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்த நிலையில் , அவர்களின் வீட்டிற்கு சென்ற இளைஞர் மீது சகோதரியின் கணவர் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து கடும் காயங்களுடன் இளைஞனை மீட்ட அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.
அத்துடன் குறித்த பெண் கிராமசேவையாளரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாரம்பரியத்திற்கும் பழக்கவழகங்களுக்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சமூகசீர்கேடுகள் வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.