நாளை மறுதினம் நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நடமாட்டத்தடை தளர்த்தப்படும் எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 23ஆம் திகதி இரவு 10 மணிவரையில் பிரதான மார்க்கங்களில் 17 தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.தொடருந்து பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, பிரதான மார்க்கத்தில் 6 தொடருந்துகளும், கரையோர மற்றும் களனிவெளி மார்க்கங்களில் தலா 4 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 3 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் தனியார் துறை பேருந்துகளையும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன். நடமாட்டத்தடை காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கப்பட்ட பேருந்துகளின் சேவைகள் அவ்வாறே தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.