யாழ் நகரில் இயங்கும் பேக்கரிகளில் நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.குறித்த அங்கிகள் யாழ் பொலிஸாரால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் அவர்கள் ஈடுபட வேண்டும் எனவும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.