தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
- Advertisement -
அதேநேரம் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.