யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருப்பது தமக்கு தெரியாது என்று ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சீன கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் சீனக் கொடி ஏற்றப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழில் சீன தேசியக் கொடி ஏற்றப்பட்ட விடயம் இதுவரை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு தெரிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரண சூழ்நிலைகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தேசியக் கொடிகளை தங்கள் வளாகத்தில் ஏற்றக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாய் நாட்டில் ஒரு செயல்பாடு அல்லது நிகழ்வு போன்றன நடைபெறும் சிறப்பு சூழ்நிலைகளில் தேசியக் கொடிகள் வளாகத்தில் ஏற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த சம்பவம் அந்த பகுதிக்கு பொறுப்பான உள்ளூராட்சி அமைப்பின் அதிகார எல்லைக்கு உட்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தை யாழ்ப்பாணத்தின் பொறுப்பான உள்ளூராட்சி அமைப்பு கவனிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு அதனை கவனிக்காது எனவும் ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.