மட்டக்களப்பு, ஆயித்தமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சம்பவதினமான நேற்று பொலிஸார் முற்றுகையிட்டனர்.
- Advertisement -
இதன் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.