அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள்.
அந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் பெற சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
- Advertisement -
ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் அரச மரத்தை தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும்.ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும்.
மிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.