விஜய் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிம்ரன் தட்டிப் பறித்து விட்டார்.. காலம் கடந்து புலம்பும் நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்(vijay) உடன் இப்போது இருக்கும் இளம் நடிகைகள் பலரும் ஜோடி போட ஆசைப்படும் நிலையில் அவர் இளமையாக இருந்தபோது பல நடிகைகள் அவருடன் நடிக்க ஆசைப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு முதலில் காதல் நாயகனாக ரசிகர்கள் மனதில் நுழைந்து பின்னர் ஆக்ஷன் அதிரடி ஹீரோவாக மாறியுள்ளார் விஜய்.

தற்சமயம் அதிக மார்க்கெட் உள்ள தமிழ் நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் படங்களை விட பெரும்பாலும் அவரது நடனத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய்யின் நடனத்திற்கு பெயர்போன பாடலாக அமைந்தது தான் ஆல்தோட்ட பூபதி. யூத் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது.

இதில் விஜய்யும் சிம்ரனும் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்தனர். அன்று முதல் இன்று வரை இந்த பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட பாடலில் நடனமாட முதன்முதலில் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் என்பவருக்கு தான் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது காயத்ரி ரகுராம் ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் காரணமாக ஒரு பாடலுக்கு நடனமாட தங்கியதாகவும், யோசித்து சொல்கிறேன் என்ற கேப்பில் சிம்ரன் உள்ளே புகுந்து வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *