தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் , தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. முதல்வராக மு.க ஸ்டாலின் மே 7ம் திகதி பதவியேற்கிறார். இதில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம், வெற்றி விவரம் திமுக கூட்டணி – 159 இடங்களில் வெற்றி திமுக – 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் – 18 விசிக – 4 மதிமுக (உதயசூரியன் சின்னம்) – 4 சிபிஎம் – 2 சிபிஐ – 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் வெற்றி அதிமுக கூட்டணி – 75 இடங்களில் வெற்றி அதிமுக – 65 பாமக – 5 பாஜக – 4 இதர கட்சிகள் – 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
- Advertisement -
மநீம+, நாம் தமிழர், அமமுக+ – எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார்.
வாக்கு சதவிகிதம்
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ள நிலையில் திமுகவிற்கு அதிமுகவிற்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் (கூட்டணி கட்சிகளை சேர்க்காமல்) வெறும் 3.87%தான். தமிழக சட்ட சபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம். திமுக – 37.15% அதிமுக – 33.28% காங்கிரஸ் – 4.28% பாட்டாளி மக்கள் கட்சி – 3.81% இந்திய கம்யூனிஸ்ட் – 1.09% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85% தேமுதிக – 0.43% பாஜக – 2.63% விசிக- 1.3% முஸ்லிம் லீக்- 0.48% மக்கள் நீதி மய்யம் 2.4% நாம் தமிழர் கட்சி 6.6% அமமுக 2.4% தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
நாம் தமிழர்தான் பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது என்பதால் வாக்கு சதவிகித ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி 6.6% வாக்குகளை பெற்றுள்ளது.
இதில் அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் பல தொகுதிகளில் டப் பைட் கொடுத்துள்ளது. அந்த முக்கியமாக மநீம கணிசமான வாக்குகளை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தனிப்பட்ட வகையில், மக்கள் நீதி மய்யம் 2.4%, அமமுக 2.4% என்ற வாக்கு சதவிகிதத்தை பெற்று உள்ளது.