நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட்-19 க்கு சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் ராஜகிரிய, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை உட்பட சகல வைத்தியசாலைகளிலும் கொவிட்-19 சிகிச்சை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறினார்.
- Advertisement -
முதற்கட்டத்தில் பொரளை ஆயுர்வேத வைத்தியசாலை, நாவின்ன வைத்தியசாலை, பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை வழங்கப்படும். நாடு பூராகவும் 30 பிரதான ஆயுர்வேத வைத்தியசாலைகள் உள்ளன.