நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களுக்கு இடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படும் கோவிட் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.