முல்லைத்தீவு உண்ணாப்புலவு கிராமத்திலுள்ள ஒருவருடைய வீடு புகுந்து, வீட்டின் உரிமையாளர் மீது மிளகாய்த் தூள் வீசிவிட்டு, வாள்கள் பொல்லுகள் சகிதம் அவர்மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் வீதியால் சென்ற இளைஞவர் ஒருவர் இதை கண்ணுற்று கிராமத்தவர்களை ஒன்று கூட்டியதால், தாக்குதலாளிகள் மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி சாரதியும் சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.