யாழ்.பருத்துறை – பொலிகண்டி பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது.
போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆயுதங்கள் பிளாஸ்டிக் பரலில் போட்டு பாதுகாப்பாக மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பலாலி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் இன்று மாலை குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்பாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.