யாழ். பருத்தித்துறை – திக்கம் பகுதியில் பொலிஸார் துரத்தி சென்றபோது வீதியால் பயணித்த ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணம் செய்த டிப்பர் வாகனம் ஒன்றை கடந்த 21ம் திகதி பொலிஸார் துரத்தி சென்றபோது வீதியால் பயணித்த ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பி சென்றிருந்தது.
- Advertisement -
இதன்போது பின்னால் துரத்திவந்த பொலிஸாரும் விபத்தில் சிக்கிய ஆசிரியையை மீட்காமல் சென்றிருந்தனர். இது தொடர்பான செய்திகள் CCTV காட்சிகளுடன் வெளியானது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கரிசனை செலித்திய பொலிஸார் 3 நாட்களின் பின் நேற்று (24/04/2021) மாலை டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்து சாரதியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் வாகனம் நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கவுள்ளனர்.