யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் இன்று பணியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்துள்ளனர்.
- Advertisement -
எனினும் குறித்த உழவு இயந்திரம் இராணுவத்தினரின் கட்டளையை மீறி தப்பி செல்ல முற்பட்ட போது வாகனத்தின் ரயர்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக உழவு இயந்திரத்தின் ரயர் காற்று போன நிலையில் அதில் பயணித்த மூவர் வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை மீட்டுள்ளனர். அத்துடன் , தப்பி சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.