நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நுரைச்சோலை மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களிலேயே இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
மேலும் இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்திலும் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்