பொலிஸ் அவசர சேவைகளுக்கு இலக்கமான 119-க்கு தவறான அழைப்பை எடுத்த 25 வயது இளம் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை கூறினார்.
- Advertisement -
குறித்த யுவதி அழைப்பை எடுத்து தங்கொட்டுவ பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யாக கூறியுள்ளார்.
இதையடுத்து தங்கொட்டுவ பகுதியில் வசிக்கும் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது மூத்த சகோதரியின் தொலைபேசியைப் பயன்படுத்தி இந்த போலி தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.