வவுனியா – செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நேற்று மாலை காப்பாச்சி பகுதியில் உள்ள வயல் காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றுள்ளார். இன்றையதினம் வீடு திரும்பாத நிலையில் வயற்பகுதிக்கு சென்ற சிலர் அவர் சடலமாக இருப்பதனை அவதானித்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
- Advertisement -
சம்பவத்தில் சின்னசிப்பிகுளம் பகுதியைச் சேர்ந்த நலீம் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
குறித்த நபர் காட்டுயானை தாக்கியமையால் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.