நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு நாள் முழுவதும் சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவேக் பல படங்களில் நடித்து வந்தார். ஓய்வில்லாமல் உழைப்பதால் காரணமோ என்னமோ அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்திவிட்டார். இதனால் இன்று காலை முதல் விவேக்கின் வீட்டில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் சமூக வலை தளங்கள் மூலமும் அறிக்கை மூலமும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சூர்யா நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதைப்போல் தளபதி விஜய் விவேக்குடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் இவர்களது காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக விவேக் மற்றும் விஜய் நடித்த படம் என்றால் அது பிகில் தான்.
விஜய் தற்போது தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டில் உள்ளதால் விவேக்கை பார்க்க வர முடியாமல் வருத்தப்பட்டு கொண்டிருப்பதாக தளபதி 65 வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் சில தினங்களில் அங்கு படப்பிடிப்பு முடிந்து விடும் எனவும் அதன் பிறகு நேரில் வந்து விவேக்கின் குடும்பத்தினரை சந்திப்பார் எனவும் விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன. விஜய் விவேக் கூட்டணியில் வெளிவந்த படங்களில் உங்களது ஃபேவரைட் என்ன? என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.